நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் போன அனிதாவின் கனவு தற்கொலை என்ற வடிவில் கலைந்து போனது குறித்து தமிழகமே கவலையில் மூழ்கியுள்ள நிலையில் அனிதாவின் தற்கொலைக்கு காரணமான முதல் குற்றவாளி மத்திய அரசுதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடைசி வரை தமிழக மக்கள் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என நம்பினர். ஆனால் மத்திய அரசு தமிழக அரசையும், தமிழக மாணவர்களையும் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது. இதில் மத்திய அரசு தான் முதல் குற்றவாளி. மோடி தான் அனிதாவின் மரணத்திற்கு பதில் சொல்ல வேண்டும்