நாளை தமிழ் புத்தாண்டில் தமிழக கவர்னர் அளிக்கு தேநீர் விருந்தை தவிர்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
நாளை தமிழகம் முழுவதும் தமிழ் புதுவருட பிறப்பு கொண்டாடப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து வழங்க தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த விருந்தில் கலந்துக் கொள்ள போவதில்லை என தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காதது மற்றும் பல்கலைகழக துணை வேந்தர் நியமனங்களில் தலையீடு உள்ளிட்ட ஆளுனரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறப்பட்டுள்ளது.