திரைப்பட தொழிலை கபளீகரம் செய்கிறது உதயநிதியின் நிறுவனம்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

புதன், 13 ஏப்ரல் 2022 (16:56 IST)
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து வெளியாகும் பெரிய படங்கள் அனைத்தும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் மூலமாகவே வெளியாகின்றன. ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் கமலின் விக்ரம் ஆகிய படங்களை வரிசையாக அந்நிறுவனம் வெளியிட்டும் வெளியிடவும் உள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘கடந்த முறை ஆட்சியில் இருந்த போது திரைப்பட தொழிலை வளரவிடாமல் செய்தனர். தற்போதும் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு சிறிய தயாரிப்பாளர்களிடம் குறைந்த தொகைக்கு படங்களை வாங்கி கபளீகரம் செய்கின்றனர். இப்படியே போனால் தமிழ் சினிமாத்துறையில் ஒரு பூகம்பமே வெடிக்கும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்