’2 நாட்களுக்கு’ மூடப்படும் மாருதி சுசுகி நிறுவனம் ! பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (17:00 IST)
உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு ஆட்டம் கண்டுள்ளது. இதனால் அந்தந்த நாடுகளில் உள்ள பல்வேறு  முதலீட்டு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் நிறுவனத்தில் உள்ளா பணியாளர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவருகின்றன.
இந்நிலையில் அந்நிய முதலீடுகள் இந்தியாவிலிருந்து போகாமல் காக்கும் பொருட்டு, நாட்டிலுள்ள தொழில் முதலீட்டு நிறுவனங்களின் பொருளாராத பற்றாக்குறையையும், மக்களின் குறைவான நுகர்வையும் போக்கும் வண்ணம் சமீபத்தில் நிர்மலா சீதாராமன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 
 
இந்நிலையில் நம் இந்திய மோட்டார் வாகன சந்தையில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் மாருதி சுசுகி நிறுவனமும்  இந்த பொருளாதார மந்தத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.எனவே ஹரியானாவில் உள்ள இரு வாகன உற்பத்தி நிலையங்கள் வரும் 7, 9 ஆகிய இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என மாருதி சுசுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல் மற்ற நிறுவங்களும் தங்கள் உற்பத்தியை நிறுத்தக்கூடிய அபாயம் இருப்பதாகவும் பார்க்கப்படுவது நாட்டிலுள்ள பொருளாதார வல்லுநர்களைப் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்