தி இந்து குழுமத்தில் தலைவராக இருந்த மாலினி பார்த்தசாரதி நேற்று திடீரென விலகியதை அடுத்து அந்த பதவிக்கு நிர்மலா லக்ஷ்மணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்து குழுமத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து மாலினி பார்த்தசாரதி விளக்கம் அளித்துள்ளார்.
எனக்கான இடமும் பணிக்கான சூழலும் குறைந்து போன நிலையில் தி இந்து நாளிதழின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.
மேலும் எனது சவாலான பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்து குடும்பத்திலிருந்து மாலினி பார்த்தசாரதி விலகியது அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று பலர் கூறி வருகின்றனர்.