அரிக்கொம்பன் உடல்நலம் பாதிப்பு? எங்கக்கிட்டயே விட்ருங்க! – போராட்டம் நடத்தும் கேரள மக்கள்!

புதன், 7 ஜூன் 2023 (09:22 IST)
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரள பகுதியிலேயே விட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த சில ஆண்டுகளாக கேரளாவின் சின்னக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற ஒற்றை காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. 8 பேரை கொன்ற அரிக்கொம்பன் விளை நிலங்களையும் சேதப்படுத்தியது. அதை பிடித்த கேரள வனத்துறை ட்ராக்கிங் கருவியை அதன்மீது பொருத்தி காட்டிற்குள் விட்டனர்.

அவ்வாறு விடப்பட்ட அரிக்கொம்பன் எல்லை தாண்டி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. தேனி மாவட்டம் கம்பம் ஏரியாவில் புகுந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பனை 7 நாட்கள் போராடி பிடித்த தமிழ்நாடு வனத்துறை அரிக்கொம்பனை திருநெல்வேலி மாவட்டத்தில் அப்பர் கோதையாறு முத்துக்குளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.



லாரியில் கொண்டு செல்லப்பட்ட அரிக்கொம்பன் உடல்நிலை மோசமாகிவிட்டதாகவும், அதன் உடல் மெலிந்து விட்டதாகவும் தகவல்கள் பரவின. இதுகுறித்து விளக்கமளித்துள்ள வனத்துறை மருத்துவர், அரிகொம்பன் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அரிக்கொம்பனை முண்டந்துறை புலிகள் சரணாலய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கேரளாவை கலக்கிய அரிக்கொம்பனுக்கு அங்கே நிறைய ரசிகர்களும் உள்ளனர். அரிக்கொம்பன் திருநெல்வேலி கொண்டு செல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ல கேரள மாவட்டம் சின்னக்கானல் பகுதியை சேர்ந்த மக்கள் அரிக்கொம்பனை மீண்டும் தங்கள் பகுதி காட்டிலேயே விட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்