18 வயதில் இனி ஆண்களுக்கு திருமணம்: புதிய சட்டம் தயாராகிறது

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (22:30 IST)
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆண்களின் திருமண வயது 21 என்பதும், பெண்களின் திருமண வயது 18 என்பதும் தெரிந்ததே. ஆனால் ஆண், பெண் இருபாலருக்கும் ஓட்டுப்போடும் வயது 18 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 18 வயதில் ஓட்டுப்போட தகுதி உள்ள ஒரு ஆண், திருமணம் செய்யும் தகுதியை பெறுவதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது 
 
இந்த நிலையில் ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் ஒரு ஆண் பிளஸ்டூ படித்து முடித்தவுடனே திருமணத்திற்கு தகுதியுடையவன் ஆகிறான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் ஆண்களின் திருமண வயதை குறைக்கும் சட்ட திருத்தத்திற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 18 வயதை கடந்த ஒரு ஆண் திருமணமாகி குடும்பத்தை நடத்தும் அளவிற்கு சம்பாதிக்கும் திறமை உள்ளவனாக இருக்க இந்தியாவில் வாய்ப்பில்லை என்பதால், ஏற்கனவே இருக்கும் 21 வயதிலேயே நீடிக்கச் செய்ய வேண்டும் என்று அவர்கள் கருத்து கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்