கடந்த சுதந்திர தினத்தன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அக்டோபர் 29 ஆம் தேதியிலிருந்து பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என கூறினார். இந்நிலையில் நேற்று துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தனது டிவிட்டர் பக்கத்தில், இன்று முதல் டெல்லி பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என பதிவு செய்திருந்தார்.
அதன் படி இன்று காலையிலிருந்து டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. திங்கட்கிழமை இரவு டெல்லியில் உள்ள அனைவருக்கும் நினைவு படுத்தப்பட்டது. இந்த திட்டம் நொய்டாவிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் வாங்கியும் பெண்கள் பயணிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அந்த டிக்கெட்டுகள் பிங்க் நிறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.