வேலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்.. 4 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை..!

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (11:34 IST)
அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் போலீசார் 4 மணி நேரத்தில் அந்த குழந்தையை மீட்டு உள்ளனர். 
 
வேலூர் அரசு மருத்துவமனையில்  தாய்க்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. இதனை அடுத்து 500க்கும் மேற்பட்ட சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்த போலீசார் 4 மணி நேரத்தில் குழந்தை காஞ்சிபுரத்தில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு குழந்தையை மீட்டனர். 
 
மேலும் குழந்தையை கடத்திய பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை கடத்திய பெண்ணின் பெயர் பத்மா என்றும் அவர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. 

குழந்தையின் தாயுடன் உணவு சாப்பிட்ட பத்மா, அதன் பின் அவருக்கு மயக்கம் மருந்து கொடுத்து குழந்தையை கடத்தி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்