குழந்தையுடன் நடந்து சென்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு !

செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (17:59 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 

இங்குள்ள ஒரு பகுதியில், ஒருவர் தன் தோள் மீது குழந்தையை அமரவைத்து நடந்துபோய்க் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த ஒரு இளைஞர் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து, அந்த நபர் அருகில் வந்ததும், சட்டென்று அவரது மார்பில் சுட்டார்.

இதில், குழந்தையுடன் சாலையில் விழுந்தார் அந்த நபர். உடனே துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அவ்விடத்தில் அருகில் நின்ற  பைக்கில் ஏறி தப்பி  ஓடிவிட்டார். அங்கிருந்த அந்த நபரின்   உறவினர்கள்,  பெண்கள் பதறியடித்துக் கொண்டு அங்கு வந்து கதறி அழுதனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்