7 ஆம் நூற்றாண்டு முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (17:55 IST)
தமிழ்நாட்டில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன்  காணாமல் போன 7 ஆம் நூற்றாண்டு பல்லவர் கால முருகன் சிலை  ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோயிலில் உள்ள முருகன் சிலை இன்று அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி நிறுவனத்திடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த  நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான  பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்த அடிப்படையில், முருகன் சிலையைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்