மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

Siva
திங்கள், 17 ஜூன் 2024 (08:04 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது என்பதும் தமிழகத்திலும் சில வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மதுரை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை வரும் ஜூன் 20ஆம் தேதி இயக்கப்பட இருக்கும் நிலையில் பிரதமர் மோடி சென்னை வந்து இந்த ரயில் சேவையை தொடக்க வைக்க உள்ளார் 
 
இந்த நிலையில் மதுரை - பெங்களூர் இடையிலான வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றதாகவும் இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் காலை 5.15 மணிக்கு கிளம்பிய இந்த ரயில் 2 மணிக்கு பெங்களூர் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மதுரையில் இருந்து பெங்களூர் செல்வதற்கு போதுமான ரயில்கள் இல்லாத நிலையில் இந்த ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கண்டிப்பாக இந்த ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்