அண்ணாநகர் ரவுடி மீது துப்பாக்கியால் சுட்ட போலீஸார்: மதுரையில் பரபரப்பு

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (09:22 IST)
மதுரை அண்ணாநகர் பகுதியிலிருந்த ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரை பகுதியில் உள்ள அண்ணா நகரில் ரவுடி குருவி விஜய் என்பவர் மீது பல வழக்குகள் இருந்தது. இதனை அடுத்து அவரை பிடிக்க முடிவு செய்த போலீசார் அவரது வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தினர்
 
இந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டு ரவுடியை போலீசார் பிடித்து விட்டதாகவும் தற்போது அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்