மதுரைப் பெரியார் பேருந்துநிலையம் மூடல் – 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் !

Webdunia
ஞாயிறு, 27 ஜனவரி 2019 (10:34 IST)
மதுரைப் பெரியார் பேருந்து நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் அதை மூடிவிட்டு தற்காலிகமாக 9 இடங்களில் பேருந்து நிலையங்கள் திறக்கப்பட இருக்கின்றன.

ஜனவரி 28 ஆம் தேதி (நாளை ) முதல் மதுரைப் பெரியார் பேருந்து நிலையம் மூடப்பட இருக்கின்றது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கிழ் இந்தப் பேருந்து நிலையம் வர இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் தற்காலிகமாக 9 இடங்களில் மதுரையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட இருக்கின்றன என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் மதுரைப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த பேருந்து நிலையங்களின் விவரம் பின்வருமாறு :-

1.திருப்பரங்குன்றம் சாலையில் கேபிஎஸ் ஹோட்டல் அருகே
2.குற்றப் பிரிவு அலுவலகம் அருகே
3.மாலைமுரசு அலுவலகம்  அருகில்
4.மேற்கு ரயில்வே கேட் அருகே மகபூப்பாளையம் அருகே
5.எல்லீஸ் நகர் அருகே மீனாட்சி அம்மன் கோயில் பார்கிங் அருகே
6.பழங்காநத்தத்தில் நடராஜ் தியேட்டர் அருகே,
7.திண்டுக்கல் சாலை அருகே
8.மேற்கு வெளி வேதி, அருகே
9.ஹயாத்கான் சாஹிப் வீதி அருகே

என 9 இடங்களில் தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையங்களில் குடிநீர் வசதியும் மற்றும் சுகாதாரமானல் கழிப்பறை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து மக்களிடமும் கருத்துக் கேட்கப்படும் என அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்