மதுரையில் கடந்த சில மாதங்களாக கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த நூலகம் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கட்டப்பட்ட கலைஞர் நூலகம் ஜூலை 15ஆம் தேதி திறக்கப்படும் என்றும் இந்த நூலகத்தை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் பத்து கோடி மதிப்பில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இந்த நூலகத்திற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் நூலகத்திற்கான மேஜை நாற்காலி புத்தகம் வைக்கும் அலமாரிகள் ஆகியவை ரூ.16.7 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.