இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பாட்டில் திருப்தி இல்லை: நீதிமன்றம்..!

Siva
ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (11:25 IST)
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என மதுரை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
 கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு பூம்புகார் கப்பல் கழக நிறுவனம் 2 கோடிக்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ள நிலையில் அந்த வாடகை வசூலிக்க அறநிலை துறை அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பாடு திருப்தியாக இல்லை என்றும் இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். 
 
ஏழை எளியவர்கள் வாடகை பாக்கி வைத்தால் உடனடியாக கடையை காலி செய்யும் அதிகாரிகள் பெரிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார். 
 
மேலும் கப்பல் நிறுவனத்திடம் இருந்து வாடகை வசூலிக்காத இந்து சமய அறநிலைத்துறை ஆணையர், கன்னியாகுமரி ஆட்சியர் ஆகியோர் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்