சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரமில்லை - உயர்நீதிமன்றம்

Sinoj

வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:27 IST)
சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரமில்லை என்று உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை  உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இதில், அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரமுள்ளது.

இத்தகையா சான்றிதழ் வழங்குவது சொத்து, வாரிசுமை, இட ஒதுக்கீடு, ஆகியவற்றில் தனிப்பட்ட சட்டங்களை பயன்படுத்தும்போது கடும் விளைவுகளை ஏற்படுத்தும், எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் என்று  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், கல்வி நிலைய விண்ணப்பங்களில் சாதி, மதம் தொடர்பான இடத்தை பூர்த்தி செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம் என்று தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்