மதுரை ஆதினம் திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (05:23 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக நியமனம் செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மதுரை ஆதினம் அருணகிரிநாதர் நேற்று திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 


அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதன் காரணமாக அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தின் தொன்மையான சைவ சமய பீடங்களில் ஒன்றாக விளங்கி வரும் மதுரை ஆதீனத்தின் தலைமை பீடாதிபதியாக அருணகிரிநாதர் செயல்பட்டு வருகிறார்.
அடுத்த கட்டுரையில்