சித்திரை திருவிழா நடத்த சொல்லி நாட்டுப்புறக் கலைஞர்கள் மதுரையில் போராட்டம்!

திங்கள், 12 ஏப்ரல் 2021 (12:18 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகிக் கொண்டே செல்வதால் மதுரை சித்திரை திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் அழகர் திருவிழா தமிழகம் முழுவதும் பிரபலமான ஒன்று. ஆண்டுதோறும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவது வாடிக்கை. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் அழகர் திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக சித்திரை திருவிழா ஆன்லைனில் லைவாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அழகர் திருவிழாவை நேரில் காண மக்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் திருவிழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா பகதர்கள் அனுமதிக்கப்படாமல் நேரடி ஒளிபரப்பு மட்டுமே செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று நாட்டுப்புறக் கலைஞர்கள் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்