இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, "உச்ச நீதிமன்றம் ஏற்கனவே யூ.பி.எஸ்.சி-க்கு (Union Public Service Commission) இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை," என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, டி.ஜி.பி. பதவிக்கான நிரந்தர நியமனம் யூ.பி.எஸ்.சி.யின் பரிந்துரையின்படிதான் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்படும்போது, பொறுப்பு நியமனத்திற்கு எதிரான மனுக்கள் செல்லாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.