நேபாளத்தில் Gen Z போராட்டக்காரர்களால் ஆட்சிக் கவிழ்ந்த நிலையில் இடைக்கால பிரதமராக யார் நியமிக்கப்பட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேபாள பிரதமராக கே.பி.சர்மா ஒலி இருந்து வந்த நிலையில் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து Gen Z இளைய தலைமுறையினர் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் அரசு அலுவலகங்கள் தீ வைக்கப்பட்ட நிலையில் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவானார்.
அதை தொடர்ந்து யார் நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பதவி ஏற்க போவது என்ற கேள்வி எழுந்துள்ளது, இதில் முன்னாள் பெண் நீதிபதி சுஷீலா கார்கி, காத்மாண்டு மேயர் போலேந்திரா ஷா உள்ளிட்டோர் பெயர் அடிப்பட்டது. ஆனால் அவர்கள் வயதானவர்கள் என்பதால் Gen Zன் மனநிலையை பிரதிபலிக்கும் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள் என்று போராட்டக்காரர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பெரும்பான்மையான போராட்டக்காரர்களால் குல்மான் கிஸிங் பெயர் பரிந்துரைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறியாளரான குல்மான் கிஸிங் நேபாள மின்துறை அத்தாரிட்டியாக செயல்பட்டு வரும் நிலையில் அவர் பிரதமராக நாட்டை வழிநடத்துவது இளைஞர்களுக்கு சரியான பாதையாக அமையும் என அவர்கள் நம்புவதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள போராட்டக்காரர்கள் சுஷீலாவிற்கு 70 வயதாவதால் அவருக்கு பதிலாக குல்மான் கிஸிங்கை இடைக்கால பிரதமராக்க தாங்கள் விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K