தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் 13ம் தேதி சனிக்கிழமையன்று திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் என 3 மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்கிறார்.
இதற்கான திட்ட விவரங்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
அந்த நிபந்தனைகளாவன, திருச்சியில் பிரச்சாரம் செய்யும் விஜய் ரோடு ஷோ செல்லக் ஊடாது. வாகனத்தில் அமர்ந்தபடியேதான் வர வேண்டும்.
திருச்சி பிரச்சாரத்தில் விஜய்யின் காருக்கு முன்னும் பின்னும் ஐந்து அல்லது ஆறு வாகனங்கள் மட்டுமே மொத்தமாக பின் தொடர்ந்து செல்ல வேண்டும்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து மரக்கடை வந்து பிரச்சாரம் செய்துவிட்டு, திருவெறும்பூர் நெடுஞ்சாலை வழியாக விஜய் வாகனம் செல்ல வேண்டும்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெறும் பிரச்சாரத்தில் விஜய் 20 முதல் 25 நிமிடங்கள் மட்டுமே உரையாற்ற வேண்டும். பிரச்சாரத்தின்போது எந்த வித சட்ட ஒழுங்கு பிரச்சினையும் வரக்கூடாது. பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K