பட்டாசு வெடிக்க கூடாது.. 25 நிமிடங்கள் தான் பேச வேண்டும்.. தவெகவுக்கு காவல்துறை கட்டுப்பாடு

Siva

வியாழன், 11 செப்டம்பர் 2025 (11:31 IST)
வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை மாநிலம் முழுவதும் பிரசார பயணத்தை திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த பயணத்தின் தொடக்கத்திலேயே காவல்துறை விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 
 
திருச்சி காவல்துறை, விஜய்யின் பிரசாரத்திற்கு 21 விதிமுறைகளை விதித்துள்ளது. அதில் சில:
 
காலை 9.35 மணிக்குள் அனைவரும் பிரசாரத்திற்கு வர வேண்டும்.
 
விஜய்யின் காருக்குப் பின்னால் ஐந்து வாகனங்கள் மட்டுமே வர வேண்டும்.
 
இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நடைபயணமாக யாரும் பின்தொடரக் கூடாது.
 
பட்டாசுகள் மற்றும் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
கலகம், சேதம் விளைவிக்கும் பொருட்கள் அல்லது ஆயுதங்கள் எடுத்துவர அனுமதி இல்லை.
 
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், பார்க்கிங் வசதிகளை கட்சி நிர்வாகிகளே செய்ய வேண்டும்.
 
பேச்சு நேரம் 20 முதல் 25 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
 
காவல்துறை வேண்டுமென்றே சாலை பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான அனுமதியை மறுப்பதாக தவெக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், பேச்சு நேரம் குறைக்கப்பட்டிருப்பதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்