வரும் வாரங்களில் முழு ஊரடங்கு ரத்தா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (10:40 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் வாரங்களில் ஊரடங்கு ரத்து செய்யப்படலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு குறித்து பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் தொற்று பரவல் வேகத்தை பொறுத்து வரும் வாரங்களில் முழு ஊரடங்கை தொடரலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்