மயான ஊழியர்களும் முன்கள பணியாளர்களே! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (10:54 IST)
தமிழகத்தில் மயானங்களில் வேலை செய்பவர்களும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் பலர் மருத்துவமனைகளை நாடும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் முன்னதாக மருத்துவர், செவிலியர், துப்புரவு தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்திருந்த தமிழக அரசு சமீபத்தில் பத்திரிக்கையாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவித்தது.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் மயான ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில் மயான ஊழியர்களும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்