யாருக்காக இந்த ஈனச்செயலில் ஈடுபட்டார் நிர்மலாதேவி? - ஸ்டாலின் ஆவேசம்

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (18:14 IST)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி கல்லூரியின் கணித பேராசிரியர் நிர்மலா தேவி, 4 மாணவிகளை அழைத்து உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறும், அதனால் பணம், சலுகைகள் உள்பட பல்வேறு பயன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறிய ஆடியோ நேற்று வெளியானது. 

 
இதனையடுத்து பேராசிரியை தேவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் தான் பேசியது மாணவிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக பேராசிரியை தேவி விளக்கம் அளித்தார். இருப்பினும் அவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. பேராசிரியை ஒருவரே உயரதிகாரிகளுக்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தால் மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின் அவர்கள் போராட்டத்தில் ஈடு, நிரமலாதேவி மீது கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. எனவே, அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். ஆனால், அவர் வீட்டி உள்பக்கம் பூட்டிக்கொண்டு வீட்டை திறக்க மறுக்கிறார்.  
 
இந்நிலையி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் “கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும். 
 
கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த “மேலிடத்திற்கு" இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்