கரூர் அருகே சட்டவிரோதமாக மணல் விற்பனை –பொதுமக்கள் குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (17:55 IST)
காவிரி ஆற்றில் மணல் அள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து உச்சநீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை கடைபிடித்த பிறகே, மணல் குவாரிகளை இயக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்காவிற்குட்பட்ட கிழக்கு தவிட்டுப்பாளையம், காவிரி ஆற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்வதாகவும், சுமார்  50  மாட்டு வண்டிகள் வண்டிகள் ஒட்டியதாகவும்,



தற்போது சுமார் 100 க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் ஒடுவதாகவும், ஒரு தனியார் தோட்டத்தில் மொத்த மணல்களையும் வைத்து விட்டு, அப்படியே மணல் லாரிகளில் அள்ளி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, சட்டவிரோத மணல் அள்ளுவதினால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதோடு, விவசாயம் ஒட்டு மொத்த கேள்விக்குறியாகி விட்ட நிலையில், குடிநீர் பற்றாக்குறையும் தற்போது தலைவிரித்தாடுகின்றது.

மேலும், ஒரு சிலர் மட்டுமே இங்கு இரவு நேரத்தில் அள்ளுவதினால் உள்ளூர்காரர்களிடம் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. மேலும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இது குறித்து கோட்டாட்சியர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளிடம் பல்வேறு முறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இதை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம் நடத்தப்போவதாகவும், அப்பகுதி வாழ் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்