சென்னை கோயம்பேடு அருகே திடீரென பற்றி எரிந்த சொகுசுக்கார்!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (15:30 IST)
சென்னை கோயம்பேடு அருகே திடீரென பற்றி எரிந்த சொகுசுக்கார்!
சென்னை கோயம்பேடு அருகே திடீரென சொகுசு கார் ஒன்று நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கோயம்பேடு மேம்பாலத்தில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரின் டிரைவர் உடனடியாக காரை நிறுத்தி தீயை அணைக்க முயன்றார் 
 
ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ பரவியது. இதுகுறித்து தகவலறிந்த அண்ணாநகர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காரில் இருந்த அனைத்து பாகங்களும் தீயில் எரிந்து சாம்பலானதோடு சில பாகங்கள் வெடித்து சிதறியது 
 
இதன் காரணமாக கோயம்பேடு சென்ட்ரல் செல்லக்கூடிய சாலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்