ஒடிசா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

Siva

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (19:48 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு ஒடிசா நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசா கடற்கரையில் கரை கடக்க கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் வடக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு தோன்றிய நிலையில் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனை அடுத்து இரண்டு நாட்களில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதனால் தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்