நாளை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என்றும், இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஒரிசா, வடக்கு ஆந்திரா கரையோரம் அதற்கு அடுத்த 2 நாள் நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ஆந்திர மாநிலத்தின் கடலோர பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், குறிப்பாக ஆந்திரா மற்றும் ராய்லசீமா கடலோர மாட்டங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்புள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், குறிப்பாக ராஜஸ்தானில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.