இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாறுமா என்பது இன்னும் ஒரு நாளில் கணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதை அடுத்து கடலோர பகுதிகளில் மீண்டும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.