பள்ளி மதிய உணவில் செத்துக் கிடந்த பல்லி! 100 மாணவர்கள் மருத்துவமனையில்..!

Prasanth Karthick

வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (11:12 IST)

ஒடிசாவில் பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சமீபமாக வட மாநிலங்களில் பள்ளிகளில் வழங்கப்படும் உணவினால் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னதாக உத்தர பிரதேசத்தின் காரக்பூரில் பள்ளி மதிய உணவை சாப்பிட்ட 15 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பள்ளியை சேர்ந்த 80 மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

தற்போது அப்படியான சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சிராப்பூரில் உதய் நாராயணன் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் மாணவர்களுக்கு வழக்கம்போல மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அதில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளது. உடனடியாக மாணவர்கள் சாப்பிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

 

அதன்பின்னர் சுமார் 100 மாணவர்கள் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட காரணங்களால் சிராப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்த கல்வி அலுவலர், கவனக்குறைவாக மாணவர்களுக்கு சமையல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்