பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு.! சுதந்திர தினத்தில் அதிரடி அறிவிப்பு..!!

Senthil Velan

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (17:34 IST)
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
 
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் பிராவதி பரிடா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறினார்.
 
மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும், மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். பெண்களின் உடல் ஆரோக்ய நலனில் இந்தத் திட்டம் சிறப்பானதாக இருக்கும் என்று ஒடிசா துணை முதல்வர் பிராவதி பரிடா குறிப்பிட்டார்.

ALSO READ: பிரதமர் மோடியுடன் இந்திய ஒலிம்பிக் வீரர்கள் சந்திப்பு.! மோடிக்கு துப்பாக்கி பரிசளித்த மனு பாக்கர்..!!
 
இந்தியாவில் கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டும் தான் மாதவிடாய் விடுமுறை அமலில் இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது மாநிலமாக ஒடிசா அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்