கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சேதம் எதுவும் இல்லை என தகவல்..!

Mahendran
வியாழன், 17 அக்டோபர் 2024 (10:07 IST)
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததாகவும், கரையை கடந்த பகுதியில் கூட பெரிய அளவில் சேதம் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு,  மண்டலமாக உருவாகி, சென்னை அருகே கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு ஆந்திரா பக்கம் சென்றதை அடுத்து எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இன்று, சென்னையில் இயல்பு வாழ்க்கை தொடங்கியுள்ளது என்பதும், இன்று காலை  சுட்டெரிக்கும் வெயில் அடிப்பதால் சென்னை மக்கள் ஆபத்திலிருந்து தப்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு புதுவை மற்றும் ஆந்திரா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் எந்த விதமான பெரிய அளவில் சேதமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இன்று அதிகாலை 4:30 மணிக்கு கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்