தென்மேற்கு பருவமழைக்கு பின், கேரளாவில் வடகிழக்கு பருவமழை இப்போது தொடங்கி, அதிக வலிமையுடன் பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.
இன்று கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது. . இதேபோல், மலப்புரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு, அதிகபட்சமாக 11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ வரை மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்தனம்திட்டா, அலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளைய தினம் கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.