அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: மீண்டும் புயலா?

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (09:22 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு புயல் மிக்ஜாம் புயலாக மாறி சென்னை உள்பட வட மாவட்டங்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு புதுவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா? அதன் பின் புயலாக மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்