வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கரை கடப்பது எங்கே?

Siva
வியாழன், 5 செப்டம்பர் 2024 (22:54 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகப் போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மையம் உருவானதை உறுதி செய்தது.

இந்த நிலையில் வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த மூன்று நாட்களில் வடக்கு திசையில் நகர்ந்து மேற்குவங்க மாநிலம் மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதனால் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்