வங்கக்கடலில் மீண்டும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி: வானிலை அறிவிப்பு

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (16:50 IST)
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீண்டும் குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் வடகிழக்கு பருவக்காற்று முடிவடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் தற்போது வறண்ட வானிலையை நிலவி வருகிறது. 
 
இந்த நிழலில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜனவரி 27ஆம் தேதி முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி அதற்கு அடுத்த மூன்று தினங்களில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்