வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: கேரளா நோக்கி செல்வதாக தகவல்!

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (13:06 IST)
வங்க கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக வலுவானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டதாகவும் தமிழ்நாடு புதுச்சேரி கரையோரம் நீடித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் இன்றும் நாளையும் கேரளா வழியாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது 
 
இதன் காரணமாக படிப்படியாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வரும் 15ஆம் தேதி புதிய புயல் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்