உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் அதிரடி!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (15:21 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தல் அறிவிப்பில் பல குறைபாடுகள் உள்ளதாக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். தேர்தல் ரத்து செய்யப்படும் என அரசியல் கட்சியினர் யாருமே எதிர்பார்க்கவில்லை.
 
புதிய அரசாணை வெளியிட்டு தேர்தலை நடத்த அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
 
இன்று விசாரணைக்கு வந்த இந்த மேல் முறையீடு விசாரணையில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்த உத்தரவு தொடரும் எனவும் அதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு விசாரணை அக்டோபர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்