உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

Webdunia
சனி, 9 ஜூலை 2016 (09:44 IST)
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என  பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
ஈரோட்டில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து காெள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண பாஜக விரும்புகிறது. இதற்காக, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரு நாட்டு மீனவர்கள் மற்றும் இரு நாட்டு அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
 
திருப்பூரில், ஐஎஸ் தீவிரவாதி தங்கி இருந்தது கண்டனத்திற்குரிய சம்பவம் ஆகும். எனவே, இது போன்ற செயல்களில் உளவுத்துறை இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.
 
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். இதற்காக பாஜக தன்னை தயார்படுத்தி வருகிறது. இதே போன்று அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும் என்றார். 
அடுத்த கட்டுரையில்