சின்ன வயசுல இவ்வளவு ஞாபக சக்தியா? – உலக சாதனை படைத்த நாமக்கல் சிறுவன்!

சனி, 11 ஜூன் 2022 (13:10 IST)
நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டை சேர்ந்த யூகேஜி சிறுவன் உலக அளவில் சாதனை படைத்துள்ளது வைரலாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார சரவணன். ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கு தக்‌ஷன் என்னும் மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார்.

யூகேஜி படித்து வந்தாலும் ஆங்கிலத்தில் 26 எழுத்துகளில் எழுத்துக்கு 10 வார்த்தைகள் என 260 வார்த்தைகளை சரளமாக சொல்கிறார். தமிழிலும் ஒவ்வொரு எழுத்துக்கும் 15க்கும் அதிகமான வார்த்தைகளை சொல்கிறாராம். மேலும் 100 பழங்களின் பெயர், 20 உடல் பாகங்கள், 40 வாகனங்கள், 25 பழ வகைகள், 35 காய்கறிகள் என சுமார் 800க்கும் அதிகமான வார்த்தைகளை தெரிந்து வைத்துள்ளார்.

தக்‌ஷனின் இந்த சாதனை யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் ரெக்டி மோஸ்ட் டாப்ப்பிக்ஸ் நேம் அண்ட் ஆப்ஜக்ட்ஸ் என்ற பிரிவில் இடம் பிடித்துள்ளது. கலாம் புக் ஆப் ரெக்கார்டிலும் இடம்பெற்றுள்ள தக்‌ஷனுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்