ஓட்டுநர் உரிமம் அவசியமில்லை; உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (16:22 IST)
புதிய வாகனங்கள் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


 

 
வாகன ஓட்டுகள் எப்போதும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைதிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 6ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மேலும் புதிய வாகனங்கள் வாங்கும்போது ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைதிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. 
 
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய வாகனங்கள் வாங்க ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இதுறித்து தமிழக அரசு நான்கு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்