அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திங்கள், 4 செப்டம்பர் 2017 (15:37 IST)
வருகிற புதன்கிழமை முதல் வாகன ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமைத்தை வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


 

 
சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.  
 
அதன்படி, செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் ஓட்டுனர்கள் அனைவரும் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அசல் உரிமம் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி, மோட்டார் வாகன சட்டம் பிரிவு 139ன் படி ஓட்டுனர் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 5 தேதி வரை அசல் உரிமத்தை கேட்க வேண்டாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
 
இந்நிலையில், அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, வருகிற 6ம் தேதி முதல் வாகன ஓட்டுனர்கள் வைத்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். எனவே, பொதுமக்கள் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது, தங்களுடன் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்