தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய மகனும் துணை முதல் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று வரலாறு படைக்க உறுதி ஏற்போம் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் நாமும் பங்கேற்றோம்.
ஆதிக்க மொழித் திணிப்பை எதிர்த்து, தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளின் உரிமைகளுக்காகவும் - ஒட்டுமொத்த மாநிலங்களின் சுயமரியாதைக்காகவும் தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுக்கும் நம் தலைவர் அவர்களின் புகழைப் போற்றிடும் வகையில் நம் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர்.
தமிழ் மொழி காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளைப் பேணிட நம் முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்த உணர்வோடு 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று வரலாறு படைக்க உறுதியேற்போம்!