கல்லூரி மாணவியை கடித்து குதறிய சிறுத்தை.. பரிதாபமாக பலியான உயிர்!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:41 IST)
மைசூரில் கல்லூரி மாணவியை சிறுத்தை கடித்து குதறி அதன் காரணமாக அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மைசூரை சேர்ந்த மேகனா என்ற 20 வயது கல்லூரி மாணவியின் வீடு வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் கல்லூரிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது வனப்பகுதி வழியாக தான் தன்னுடைய வீட்டுக்கு செல்வது வழக்கம்.
 
இந்த நிலையில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் வீட்டிற்கு கல்லூரி மாணவி மேகனா சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த சிறுத்தை அவரை நோக்கி பாய்ந்தது. மேலும் அவரை கடித்து குதறியது.
 
இதனால் படுகாயமடைந்த மேகனா காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கு விரைந்தபோது சிறுத்தை, கூட்டத்தைப் பார்த்தவுடன் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
 
இருப்பினும் சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்த மேகனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்