லியோ வழக்கறிஞர்கள் குழுவினர் வந்த கார் விபத்து.. தலைமை செயலக வளாகத்தில் பரபரப்பு..!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (17:48 IST)
தளபதி விஜய் நடித்த  லியோ திரைப்பட த்திற்கு அதிகாலை காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரின் வழக்கறிஞர்கள் குழு இன்று தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
 
இந்த பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளரும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு லியோ பாடத்தின் தயாரிப்பாளரின் வழக்கறிஞர்கள் குழு காரில் வந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. 
 
இந்த விபத்தில்  இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது வழக்கறிஞர் குழுவினர் வந்த கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்