விஜய்யின் 'லியோ' தெலுங்கு பதிப்பை வெளியிட தடை- ரசிகர்கள் அதிர்ச்சி!

செவ்வாய், 17 அக்டோபர் 2023 (14:37 IST)
லியோ' படத்தின் தலைப்பு பிரச்சனை தொடர்பாக இதன் தெலுங்குப் பதிப்பை அக்டோபர்  20 ஆம் தேதி வரை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்து.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில்,  விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அரசுக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

லியோ டிரைலரின்போது ரசிகர்கள் தியேட்டரை  சேதப்படுத்தியது, லியோ பட ஆடியோ வெளியீட்டு விழா ரத்து, அதிகாலை காட்சி ரத்து என பல தடைகளை சந்தித்து வரும் நிலையில்,தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில்  பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள 'லியோ' படத்தின் தலைப்பு பிரச்சனை தொடர்பாக இதன் தெலுங்குப் பதிப்பை அக்டோபர்  20 ஆம் தேதி வரை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்து.

D என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தெலுங்கானா   நீதிமன்றம் இந்த அதிரடி  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் படக்குழு மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

BREAKING: #LEO Telugu release STOPPED till 20th October 2023.

The Court has issued restraining orders to withhold the Telugu release until 20th October in response to the petition filed against… pic.twitter.com/1kTij5IssR

— Manobala Vijayabalan (@ManobalaV) October 17, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்