"குன்னூரில் ஏற்பட்ட மண்சரிவு" - மண்ணில் புதைந்து ஆசிரியை பலி.!!

Senthil Velan

திங்கள், 30 செப்டம்பர் 2024 (12:30 IST)
குன்னூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள சேட் காம்பவுண்ட் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக திடீரென்று அங்கு நடைபாதையில் மண்சரிவு ஏற்பட்டது. 
 
அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி என்பவர் மண்சரிவில் சிக்கி கொண்டார். மேலும் வீட்டில் இருந்த அவரது கணவர் ரவி, மகள்கள் வர்ஷா, ஆயூ ஆகியோர் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டனர்.  இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், அப்பகுதி மக்கள் உதவியுடன் வீட்டில் சிக்கி கொண்ட மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர்.


ALSO READ: வானிலை முன்னெச்சரிக்கை குறித்து அறிய 'TN ALERT செயலி'.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்.!!
 
ஆனால் மண்ணில சிக்கிய ஜெயலட்சுமியை 3 மணி நேரம் போராடி சடலமாக மீட்டனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்