கடந்த 2013 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா நடித்த சொன்னா புரியாது படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரதீப் கே விஜயன். தெகிடி, மேயாத மான், லிஃப்ட் , இரும்புத் திரை , தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , என்னோடு விளையாடு , ஒரு நாள் கூத்து , மீசையை முறுக்கு , நெஞில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பிரதீப் விஜயன் கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படத்தில் நடித்தார்.
கதவு உள்பக்கம் பூட்டியிருந்ததாலும் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வந்ததால் உடனே காவல் துறைக்கு தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குளியறையில் இறந்த நிலையில் பிரதீப் விஜயன் கிடந்துள்ளார். அவர்ருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.